டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

சென்னை: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியடப்பட்டுள்ளது.

தமிழக அரசுப் பணிகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், நில அளவையர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணி தேர்வாணையம் வரும் பிப்ரவரி 11ம் தேதி தேர்வுகளை நடத்துகிறது.

இந்த தேர்வுக்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் 21 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.

அதேபோல், கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வுகள் குரூப் 4 தேர்வுடன் இணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தேர்வுக்காக விண்ணப்பித்தவர்கள் தங்களது ஹால் டிக்கெட்டுகளை தேர்வாணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப பதிவு எண், பிறந்த தேதியை உட்செலுத்தி அனுமதிச்சீட்டை பெறலாம் என தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

More News >>