அஜித்தின் நேர்கொண்ட பார்வை ரிலீஸ் தேதி அறிவிப்பு!
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் தயாராகிவரும் படம் நேர்கொண்ட பார்வை. இப்படத்தின் வெளியீட்டு தேதி தற்பொழுது உறுதியாகியுள்ளது.
பாலிவுட்டில் அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் வெளியாகி ஹிட்டான படம் பிங்க். இப்படத்தின் தமிழ் ரிமேக் தான் நேர்கொண்ட பார்வை. இதில் அமிதாப் கேரக்டரில் அஜித் நடித்துவருகிறார். டாப்ஸி கேரக்டரில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார். தற்பொழுது ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஸ்ரீதேதி கணவர் போனிகபூர் தயாரித்துவரும் இப்படம் அஜித் பிறந்த நாளான மே 1ஆம் தேதி வெளியாகும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டது. ஆனால், குறுகிய காலத்துக்குள் படத்தை தயார் செய்வது இயலாத காரியம் என்பதா படம் தள்ளிப்போகும் என்று சொல்லப்பட்டது.
அஜித் நடிக்கும் நேர்கொண்ட பார்வை படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதை பட தயாரிப்பாளர் போனிகபூர் தெரிவித்துள்ளார். அஜித்துடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வித்யாபாலன், ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்ட பலர் நடித்துவருகின்றனர். இசை யுவன்ஷங்கர் ராஜா.