ஒருவழியாக என்.ஜி.கே ரிலீஸ் தேதி அறிவிப்பு.. குஷியில் ரசிகர்கள்
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகிவரும் என்.ஜி.கே. ரிலீஸ் தேதி உறுதியாகியுள்ளது.
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் என்.ஜி.கே. அதாவது இந்தப் படத்தில் சூர்யாவின் பெயர் நந்த கோபாலன் குமரன். அதன் சுருக்கமே என்.ஜி.கே ஆறு வருட நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் வெளியாக இருக்கும் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. சமீபத்தில் காதலர் தினத்தன்று என்.ஜி.கே டீஸர் வெளியானது.
சமீபத்தில் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு படத்தின் டப்பிங் வேலைகள் போய்கொண்டிருப்பதாகவும், விரைவில் பட வெளியீட்டு தேதியை வெளியிடுவதாகவும் தெரிவிந்திருந்தார். இந்நிலையில் எஸ்.ஆர்.பிரபு தன்னுடைய சமூக வலைதளத்தில் படத்தில் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார். அதன்படி, சூர்யா நடிக்கும் என்.ஜி.கே. திரைப்படம் மே 31ஆம் தேதி வெளியாக இருப்பது உறுதியாகியுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.