nbspஉண்மையில் இது பெரிய விஷயம்! தீபிகா படுகோனுக்கு குவியும் பாராட்டுகள்
பாலிவுட்டில் தன் கேரக்டர்க்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தேர்வு செய்து நடித்து கொண்டு வருபவர் தீபிகா படுகோன். பத்மாவத் படத்தின் ஹிட்டுக்குப் பிறகு தன்னுடைய கல்யாண வேலைகளில் பிஸியாகிவிட்டார். எதிர்பார்த்தபடியே `ரன்வீர் - தீபிகா’ திருமணத்தில் பாலிவுட் திரையுலகே கலந்து கொண்டு மிகப்பெரிய கொண்டாட்டமாக இருந்தது.
எல்லா கொண்டாட்டங்களையும் முடித்துவிட்டு நடிகர் ரன்வீர் தற்போது `83’ பட வேலைகளில் பிஸியாக இருக்கிறார். அதைத் தொடர்ந்து தீபிகாவும் தன்னுடைய அடுத்த பட வேலைகளில் இறங்கிவிட்டார். அமிலத் தாக்குதலில் உயிர் பிழைத்த (acid attack survivor) லக்ஷ்மி அகர்வாலின் வாழ்க்கையை தழுவி உருவாகும் அந்தப் படத்துக்கு ‘சபாக்’என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் லக்ஷ்மி அகர்வாலாக நடிக்கிறார் தீபிகா. சமீபத்தில் படத்தின் ஸ்க்ரிப்ட் ரீடிங் செஷன் நடந்திருக்கிறது, தற்போது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டிருக்கிறது படக்குழு. இந்த வாரத்திலிருந்து படப்பிடிப்புகள் துவங்க உள்ளன. அடுத்த வருடம் ஜனவரி 10ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது. மேக்னா குல்சாருடன் இணைந்து படத்தின் இணை தயாரிப்பாளராவும் தீபிகா இருக்கிறார்.