பி.டி.உஷாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம்!
கோழிக்கோடு பல்கலைக்கழகம் பி.டி.உஷாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.
இந்த பட்டமளிப்பு விழாவில் பல்கலைக் கழகத்தின் வேந்தரான கேரள ஆளுநர் சதாசிவம், கேரளக் கல்வித்துறை அமைச்சரும் இணை வேந்தருமான ரவீந்திரநாத், துணை வேந்தர் முகமது பஷீர் உள்ளிட்ட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.
தனது 16-வது வயதில், 1980-ம் ஆண்டு மாஸ்கோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டார் பி.டி.உஷா. இவர், காமன்வெல்த் போட்டியில் அதிவேகமாக ஓடி சாதனை படைத்தார். தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளில் 100-க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். அவருக்கு வயது 53. பி.டி.உஷாவின் சாதனையைக் கௌரவிக்கும் வகையில் இந்த டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
பி.டி.உஷா தற்போது இந்திய ரயில்வே துறையில் பணியாற்றி வருகிறார். மேலும், இளம் வீரர்களை உருவாக்கும் நோக்கில் கோழிக்கோடு நகருக்கு அருகில் அத்லெடிக் பயிற்சி மையத்தையும் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நடிகர் மோகன்லாலுக்கும் கோழிக்கோடு பல்கலைக்கழகம் டாக்கர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.