டேஸ்டி தேங்காய்ப் போளி ரெசிபி

வீட்டிலேயே சுலபமாக செய்யக்கூடிய தேங்காய்ப் போளி ரெசிபி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

மைதா - 1 கப்

எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

தேங்காய் துருவல் - 1 கப்

சர்க்கரை - முக்கால் கப்

ஏலக்காய் பொடி - அரை டீஸ்பூன்

குங்குமப்பூ - 12

நெய் - அரை டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்துக் கொள்ளவும். அதன்மீது எண்ணெய்விட்டு பிசைந்து சுமார் 2 மணி நேரம் ஊறவிடவும்.

ஒரு வாணலியில் தேங்காய் துருவல் சேர்த்து மிதமான சூட்டில் வறுத்துக் கொள்ளவும். அத்துடன், சர்க்கரை, ஏலக்காய்த் தூள் சேர்த்து கிளறி வதக்கவும். இறுதியாக, குங்குமப்பூ சேர்த்து கிளறி இறக்கவும்.

ஊறவைத்த மாவில் கொஞ்சமாக எடுத்து சிறிய சப்பாத்தி பதத்திற்கு உருட்டிக் கொள்ளவும். அதனுள் 2 டீஸ்பூன் தேங்காய் கலவை வைத்து அனைத்துப் பக்கமும் மூடிவிட்டு மீண்டும் உருட்டி எடுக்கவும்.

பின்னர், தவாவில் நெய்விட்டு சூடானதும் விரித்து வைத்த மாவை போட்டு இரண்டு பக்கமும் வேக வைத்து இறக்கவும்.

அவ்ளோதாங்க.. சுவையான தேங்காய் போளி ரெடி..!

More News >>