வன்முறை மட்டுமல்ல, பலம், தைரியம், நம்பிக்கை- வேறுபட்ட வேடத்தில் தீபிகா படுகோன்
By Gokulakannan.D
ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லஷ்மி அகர்வால் வாழ்கையைச் சித்தரிக்கும் ’சபாக்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான நிலையில் ,பாதிக்கப்பட்ட பெண்களின் ஆதரவைப் பெற்று வருகிறார் தீபிகா படுகோன்.
காதலை ஏற்க மறுத்த ஒரே காரணத்துக்காகத் தனது 15 வயதிலேயே ஆசிட் என்ற கொடூரமான தாக்குதலை எதிர்கொண்டவர் லஷ்மி அகர்வால் . 2005ம் ஆண்டு தலைநகர் டெல்லியில்தேள்ளியில் இந்த சம்பவம் நடை பெற்றது. இந்நிலையில் இவரின் வாழ்க்கை கதையில் , ’சபாக்’ என்ற படத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்து வருகிறார் தீபிகா படுகோன். "சபாக்' திரைப்படத்தை மேக்னா குல்சார் இயக்குகிறார்.
இந்தக் கதை குறித்துப் பேசிய தீபிகா "இந்த கதையை நான் கேள்விப்பட்டபோது, அது ஒரு வன்முறை மட்டுமல்ல, பலம், தைரியம், நம்பிக்கை மற்றும் வெற்றி ஆகியவற்றின் காரணமாக ஆழமாக நகர்ந்தேன் அது என்னைப் பாதித்தது, தனிப்பட்ட முறையில் மற்றும் ஆக்கப்பூர்வமாக, நான் அதற்கு அப்பால் செல்ல வேண்டியிருந்தது" எனக் கூறினார் .
நேற்று வெளியான இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஐ பார்த்த ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்கள் மட்டுமின்றி அனைவரும், தீபிகா படுகோனேவிற்கு பெரும் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர்.