நாடாளுமன்றம், சட்டப்பேரவைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்?
நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களின் சட்டப்பேரவைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் சூழலை உருவாக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
பாஜக தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்றது.
அப்போது பேசிய மோடி, “நாடு முழுவதும் வெவ்வேறு காலங்களில் தேர்தல்கள் நடப்பதால், வரிப்பணம் பெருமளவில் வீணாவதாக” தெரிவித்தார். மேலும், “வளர்ச்சிப் பணிகள் தேக்கமடைவதால், நாடாளுமன்ற மக்களவை, சட்டப்பேரவைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டியது அவசியம்” என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்நிலையில், ‘நாடாளுமன்றத்துக்கும், சட்டப்பேரவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பான பேச்சுகள் நீண்டு நாட்களாக இருந்து வருவதால் அத்தகைய சூழல் விரைவில் உருவாக வாய்ப்புள்ளதாக’ அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.