ரூபி.. அலெக்ஸ்.. இரண்டு பேய்களின் கதை - மிரட்டும் தேவி 2 டீசர்
பிரபுதேவா, தமன்னா நடிப்பில் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கிய 'தேவி' திரைப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான தேவி திரைப்படம், தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் வெளியானது.
தற்போது தேவி படத்தின் இரண்டாம் பாகம் 'தேவி 2' படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்க்ரீன் சீன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
தேவி 2 படத்தில், பிரபுதேவா உடன் தமன்னா, நந்திதா, கோவை சரளா, ஆர்ஜே பாலாஜி, சதீஷ், யோகிபாபு, குருசோமசுந்தரம், நாசர் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. கோபிசுந்தர் இசையமைத்துள்ளார். தேவி 2, தமிழ், இந்தி என இரு மொழிகளில் உருவாகியுள்ளது. இந்தப்படம் ஏப்ரல் 5 ஆம் தேதி வெளியாகிறது. பேய் ஃபார்முலாவில் வெளியான இந்தப் படத்துக்கு கிடைத்த அமோக வரவேற்பினால், தேவி முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகத்தின் கதை இருக்கும் என்று சொல்லப்படுகிறது. முதல் பாகத்தில் தமன்னாவுக்கு ரூபி என்ற பேய் பிடிக்கும், தற்போது இரண்டாம் பாகத்தில் பிரபுதேவாவுக்கு ரூபியின் காதலன் அலெக்ஸின் பேய் பிடித்துவிடுமாம். தற்போது இந்த படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.
Teaser Link : https://goo.gl/pHk7L6