பொடுகு தொல்லையை போக்க எளிய வழி

'டேண்ட்ரஃப்' (dandruff) என்று கூறப்படும் பொடுகு, பெரிய தொல்லையாக பெண்கள் மத்தியில் பேசப்படுகிறது. தலைப்பகுதி தோலில் ஏற்படும் தொற்றினை போக்கினால் பொடுகு தொல்லையும் ஒழிந்துவிடும்.  "என்னென்னவோ செய்து பாத்தாச்சு..." என்று சலித்துக் கொள்கிறீர்களா? செலவும், பக்க விளைவும் இல்லாமல் பொடுகு மற்றும் தலை அரிப்பு பிரச்னையை போக்க எளிய வழி உள்ளது.   'இஞ்சி' அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருள். இஞ்சி முரப்பா, இஞ்சி டீ என்று நம் வாழ்வோடு இணைந்த ஒன்று அது. இஞ்சி, மருத்துவ குணங்கள் அடங்கியது. வலிநீக்கியாக, செரிமான கோளாறுகளை சரி செய்ய, உறக்கத்தை தூண்ட, சளி, இருமல் தொல்லையை சரி செய்ய என்று பல்வேறு விதங்களில் இஞ்சி பயன்படுத்தப்படுகிறது.    பொடுகு தொல்லையை போக்கும் வழிமுறை:   இஞ்சியை சுத்தப்படுத்தி, துண்டுதுண்டாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கிய துண்டுகளை பாத்திரத்தில் போட்டு, நீர் சேர்த்து குறைந்த ஜூவாலையில் சூடாக்கவும்.    நீர் மெதுவாக நிறம் மாறும்.   சில நிமிடங்கள் கழித்து நீரை வடிகட்டவும்.   எஞ்சிய இஞ்சி துண்டுகளை நன்றாக பிழிந்து முடிந்த அளவு நீரை இறுத்துக் கொள்ளவும். வடித்து எடுத்த நீரை குளிர விடவும்.   அந்த நீரை ஒரு பாட்டிலில் சேகரித்து வைத்து, குளிப்பதற்கு அரை மணி நேரம் முன்பு தலைப்பகுதி தோலில் படும்படி மெதுவாக, நன்றாக தேய்க்கவும்.    அரைமணி நேரம் கழித்து, பொடுகுக்கான ஷாம்பூ (anti-dandruff shampoo) பயன்படுத்தி நன்றாக குளிக்கவும்.   வாரம் ஒருமுறை இப்படி செய்து வந்தால் பொடுகு தொல்லை நீங்கும்.
More News >>