அமெரிக்காவில் களைகட்டிய கிராமி விருதுகள் விழா
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடத்தப்பட்ட 60-ஆவது கிராமி விருதுகள் விழாவில், பிரபல பாப் பாடகர் புருனோ மார்ஸ் 6 விருதுகளை அள்ளிச்சென்றார்.
அமெரிக்காவில், இசைச்துறையில் சிறந்து விளங்குபவர்களுக்காக, கிராமி விருதுகள், கடந்த 1959-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டிற்கான விழா நியூயார்க்கில் உள்ள மேடிசன் அரங்கில் நடைபெற்றது. இதில், அமெரிக்காவின் புகழ்பெற்ற பாப் இசை கலைஞர்கள், பாடகர்கள், நடிகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
விழாவில், அமெரிக்க பாப் பாடகர் புருனோ மார்ஸ்க்கு சிறந்த பாடகர், சிறந்த பாடலாசிரியர், சிறந்த தொழில்நுட்ப கலைஞர் உள்ளிட்ட பிரிவுகளில் 6 கிராமி விருதுகள் வழங்கப்பட்டன. இது தவிர, அவர் இசையமைத்து பாடிய 24 கே மேஜிக் எனும் பாடல், 2018-ஆம் ஆண்டின் சிறந்த பாடலாகவும் தேர்வு செய்யப்பட்டது.
இந்த விழாவில், கண்கவர் ஆடைகளில் கலைஞர்கள் ஜொலித்தனர். நடன நிகழ்ச்சிகள் களைகட்டின ரசிகர்கள் மிகுந்த ஆரவாரத்துடன் உற்சாகமாக இதனைக் கண்டுகளித்தனர்.