மும்பையில் தொடங்கும் ஷூட்டிங்.. ரஜினியின் புது பட அப்டேட்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் மக்கள் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ். ரஜினி அடுத்த நகர்வா, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்நிலையில் படத்தின் முன் தயாரிப்பு வேலைகள் தற்பொழுது நடந்துவருகிறது. வருகிற ஏப்ரல் 10 ஆம் தேதி படப்பிடிப்பு துவங்குகிறது. படப்பிடிப்பை மும்பை பகுதியில் நடத்தவிருக்கிறது படக்குழு. ஏ.ஆர்.முருகதாஸூக்கு மும்பை ரொம்பவும் அதிர்ஷமான இடம். ஏனென்றால், விஜய் நடிப்பில் உருவான துப்பாக்கி படம் கூட மும்பையில் படமாக்கப்பட்டது. அதன்படி, மீண்டும் மும்பையில் படப்பிடிப்பை துவங்க இருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.
லைகா புரொடக்ஷன் தயாரிக்க இருக்கும் இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா நடிக்க இருக்கிறார். பேட்ட படத்துக்குப் பிறகு, இந்தப் படத்துக்கும் அனிருத் இசையமைக்கிறார். பொதுவாகவே சமூக பிரச்னை சார்ந்த படங்களை இயக்கக் கூடியவர் ஏ.ஆர்.முருகதாஸ். ரஜினியின் இந்தப் படமும் அப்படியான ஒன்று தான். அரசியல் சார்ந்த படமாக இது இருக்கும் என்று சொல்லப்படுகிறது.