தேர்தல் சமயத்தில் வெளியாகும் மோகன்லாலின் லூசிஃபர் ப்ரித்விராஜின் மாஸ்டர் பிளான்
நடிகர் ப்ரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாகிவரும் லூசிஃபர் படம் வருகிற மார்ச் 28ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
மலையாளத்தில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டர் ப்ரித்விராஜ். ‘மொழி’, ‘கண்ணாம்பூச்சி ஏனடா’, ‘ராவணன்’ போன்ற படங்களில் நடித்ததன் மூலம் கோலிவுட்டிலும் பிரபலமானார். அடுத்த நகர்வா இயக்குநராகவும் தனக்கான இடத்தை தக்கவைக்க அவதாரம் எடுத்திருக்கிறார். ப்ரித்வி இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் படம் லூசிஃபர். மோகன் லால், விவேக் ஓபராய், இந்திரஜித், டொவினோ, மஞ்சுவாரியர், மம்தா மோகன்தாஸ், மஞ்சுவாரியர் என பல நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
லூசிஃபர் படத்தின் படப்பிடிப்பை கடந்த ஜனவரி 20ஆம் தேதியே முடித்து, போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் தீவிரமாக இறங்கினார் ப்ரித்விராஜ். இப்போ படமும் ரிலீஸூக்கு தயாராகிவிட்டது. வரும் மார்ச் 28ஆம் தேதி உலகமெங்கும் படம் வெளியாக இருக்கிறது. மோகன்லால் நடிக்க ப்ரித்விராஜ் இயக்கியிருப்பதே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது. சமீபத்திய தகவல் என்னவென்றால், 1500 திரையரங்குல இந்தியா முழுக்க வெளியாக இருக்கிறது. தவிர, படத்தில் ஒரு கேரக்டரில் ப்ரித்விராஜ் நடிக்கவும் செய்திருக்கிறார் அதை மோகன்லால் சமீபத்தில் வெளியிட்ட பட போஸ்டர் ஒன்று தெளிவுபடுத்தியிருக்கிறது. சயத் மசூத் என்கிற கேரக்டரில் தான் படத்தில் நடித்திருக்கிறாராம். அரசியல் த்ரில்லரான இப்படம் உருவாகியிருப்பதால், தேர்தல் நேரத்தில் இறக்கிவிடுகிறது படக்குழு. மோகன்லால் மற்றும் ப்ரித்வி என இரண்டு ரசிகர்களும் லூசிஃபர் படத்துக்காக வெறித்தன வெயிட்டிங்.