யம்மி பாஸ்தா ரெசிபி

குழந்தைகளுக்கு பிடித்த பாஸ்தா எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.

                                    தேவையான பொருட்கள்: பாஸ்தா - 2 கப்இஞ்சி - ஒரு துண்டுபூண்டு - 2 பல்எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்வெங்காயம் - 2தக்காளி - 4கேரட் - 1 கப்குடைமிளகாய் - 1 கப்கரம் மசாலா - அரை டீஸ்பூன்சில்லி சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்தக்காளி சாள் - 2 டேபிள் ஸ்பூன்மிளகுத் தூள்கொத்துமல்லி உப்பு - தேவையான அளவு

செய்முறை:ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். தண்ணீர் கொதி வந்ததும் பாஸ்தா, உப்பு சேர்த்து 10 நிமிடங்கள் வேக வைக்கவும். பாஸ்தா வெந்ததும், வடிகட்டி தனியாக வைக்கவும்.ஒரு வாணலியில், எண்ணெய்விட்டு சூடானதும், பூண்டு, இஞ்சி, வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு, தக்காளி சேர்த்து நன்றாக குழையும் வரை வதக்கவும்.அத்துடன், கேரட், குடை மிளகாய் சேர்த்து நன்றாக கிளறி வேகவிடவும்.பின்னர், கரம் மசாலா, சில்லி சாஸ், தக்காளி சாஸ், பாஸ்தா, உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.இறுதியாக, மிளகுத்தூள், கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.சுவையான பாஸ்தா ரெடி..!

More News >>