சுவையான மில்க் ஸ்வீட் ரெசிபி

வீட்டிலேயே சுவையான மில்க் ஸ்வீட் எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.

         

தேவையான பொருட்கள்:

பால் - 2 லிட்டர்

சர்க்கரை - 200 கிராம்

எலுமிச்சைப் பழச் சாறு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் பால் ஊற்றி சுமார் ஒரு மணி நேரம் வரை கெட்டியாகும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும்.

பால் கெட்டியாக ஆரம்பித்ததும், எலுமிச்சைப் பழ சாறு சேர்க்கவும். இதனால், பால் திரண்டு வர ஆரம்பிக்கும்.

இந்நிலையில், சர்க்கரை சேர்த்து மீண்டும் கிளறிக் கொண்டே இருக்கவும்.பால் கெட்டியானதும், ஏலக்காய்த் தூள் சேர்த்து மீண்டும் கிளறவும்.

தண்ணீர் முழுவதுமாக வற்றியப்பிறகு, ஒரு பாத்திரத்தில் போட்டு சமமாக்கி ஆறவிடவும்.

இறுதியாக, கத்தியால் வெட்டி துண்டுகள் போட்டு பரிமாறினால் சுவையான மில்க் ஸ்வீட் ரெடி..!

More News >>