nbspமன்னர் தோமிஸ்லா விருது ..விருதினை குரேஷிய நாட்டிற்கு அர்ப்பணித்த ராம்நாத் கோவிந்த்

மூன்று  நாள் அரசு முறை பயணமாக குரேஷியா சென்றுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்  இந்தியா, குரேஷியா பொருளாதார  உச்சி மாநாட்டில் இன்று பங்கேற்கிறார் .   குரேஷியா, பொலிவியா, சிலி ஆகிய மூன்று நாடுகளின் பயணத்தில் முதல் கட்டமாக குரேஷிய தலைநகருக்குச் சென்றார் ராம்நாத் கோவிந்த். அவருக்குக் குடியரசுத் தலைவர் மாளிகையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது .நேற்று அவர் குரேஷிய அதிபருடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார்.   பின்னர் கலாச்சாரம், சுற்றுலா, விளையாட்டு உள்ளிட்ட 4 துறைகளில் இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட நான்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. குரேசியாவில் பயணம் மேற்கொண்டுள்ள ராம்நாத் கோவிந்த்க்கு 'மன்னர் தோமிஸ்லா'  விருது வழங்கி அந்நாட்டு அரசு கௌரவித்தது .   இந்தியா, குரேஷியா இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்தி  ஒட்டுமொத்த உறவுகளில் முன்னேற்றம் ஏற்பட ராம்நாத் கோவிந்தின் சிறப்புமிக்க பங்களிப்பிற்காக அவருக்கு இந்த விருதினை குரேஷிய அதிபர் வழங்கினார் . இந்த விருதினை இந்தியா, குரேஷிய நட்புணர்விற்கு அர்ப்பணித்தார் ராம்நாத் கோவிந்த் .   இதனிடையே குரேஷியாவில் உள்ள இந்தியா வம்சாவளியினரிடம் பேசிய ராம்நாத் கோவிந்த் அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய இந்தியா அனைத்து  ஒத்துழைப்பையும் வழங்கும் என்றார் .   
More News >>