ஐபிஎல் 2018: இதோ சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முழு விவரம்!
மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2018-ஆம் சீசனுக்கான வீரர்களின் ஏலம் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்களில் பெங்களூருவில் நடைபெற்றது. இந்த ஏலப்பட்டியலில் 360 இந்திய வீரர்கள் உட்பட 578 பேர் இடம்பெற்று இருந்தனர்.
இந்த ஏல நிகழ்ச்சியில் 56 வெளிநாட்டு வீரர்கள் உட்பட மொத்தம் 169 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டனர். இதில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
தோனி, ரெய்னா, ஜடேஜா ஆகியோரை ஏற்கெனவே தக்க வைத்திருந்த நிலையில், மேலும் 15 பேர் அணியில் இடம்பெற வேண்டும் என்பதால் இந்த சீசன் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆர்வத்துடன் கலந்து கொண்டது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிகபட்சமாக கேதர் ஜாதவை 7.8 கோடிக்கு ஏலம் எடுத்தது. இந்த சீசனுக்கான ஏலத்தில் 11 ஆல்ரவுண்டர்கள், 8 பந்து வீச்சாளர்கள், 4 விக்கெட் கீப்பர்கள், 2 பேட்ஸ்மேன்கள் அடங்குவார்கள்.
வீரர்கள் விவரம்:
பேட்ஸ்மேன்கள்:
முரளி விஜய் - ரூ. 2 கோடி.டு பிளசிஸ் - ரூ. 1.6 கோடி.
விக்கெட் கீப்பர்கள்:
தோனி - ரூ. 15 கோடிஅம்பதி ராயுடு - ரூ. 2.2 கோடிசாம் பில்லிங்ஸ் - ரூ. 1 கோடிஎன்.ஜெகதீசன் - ரூ. 20 லட்சம்.
பந்து வீச்சாளர்கள்:
கரண் சர்மா - ரூ. 5 கோடிஷர்துல் தாகூர் - ரூ. 2.6 கோடிஹர்பஜன் சிங் - ரூ. 2 கோடிமார்க் வுட் - ரூ. 1.5 கோடிஇம்ரான் தாஹிர் - ரூ. 1 கோடிநெகிடி - ரூ. 50 லட்சம்கேஎம் ஆசிஃப் - ரூ. 40 லட்சம்மோனு சிங் ரூ. 20 லட்சம்
ஆல்ரவுண்டர்கள்:
சுரேஷ் ரெய்னா - ரூ. 11 கோடிஜடேஜா - ரூ. 7 கோடிகேதார் ஜாதவ் - ரூ. 7.80 கோடிவெய்ன் பிராவோ - ரூ. 6.40 கோடிஷேன் வாட்சன் - ரூ. 4 கோடிகனிஷ்க் சேத் - ரூ. 20 லட்சம்ஷோரே - ரூ. 20 லட்சம்சைதான்யா பிஷ்னாய் - ரூ. 20 லட்சம்தீபக் சாஹர் - ரூ. 80 லட்சம்மிட்செல் சான்ட்னெர் - ரூ. 50 லட்சம்சிட்டிஸ் ஷர்மா - ரூ. 20 லட்சம்