பறக்கும் படை சோதனையில் சிக்கும் பணம், நகை, பரிசுப் பொருட்கள் - தமிழ்நாடு தான் டாப் கேரளாவில் ரொம்ப ,ரொம்ப சுத்தம்

பொதுத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலேயே தேர்தல் நன்னடத்தை விதிகளும் அமலுக்கு வந்து விட்டது. பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு வாகனச் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ரொக்கம் கொண்டு சென்றால் அதற்குரிய ஆவணங்களைக் காண்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் பறிமுதல் செய்யப்பட்டு அரசு கருவூலத்தில் சேர்க்கப்படுகிறது. இது போன்றுதான் நகை, பரிசுப் பொருட்கள், சேலை, துணிமணிகளுக்கும் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்படுகிறது.

இதில் பாதிக்கப் படுவது வரி கட்டாமல் வியாபாரம் செய்யும் வியாபாரிகள் தான். மேலும் ஆடு, மாடு, விவசாய உற்பத்திப் பொருட்களை உற்பத்தி செய்யும் சாதாரண விவசாயிகளும் பாதிக்கப்படுகின்றனர்.

வாக்காளர்களைக் கவர அரசியல்வாதிகளின் பணப்பட்டுவாடாவை கண்காணிக்கவும், தடுக்கவும் அமைக்கப்பட்ட பறக்கும் படையினரிடம் நாடு முழுவதும் கடந்த 10 நாட்களில் ரொக்கமாக மட்டும் 143 கோடி ரூபாயும் சேர்த்து நகை, பரிசுப் பொருட்கள் என மொத்தம் 504 கோடி ரூபாய் மதிப்புக்கு பறிமுதல் செய்யப் பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் மாநில வாரியாக பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதிலும் தமிழகம் தான் டாப் இடத்தில் உள்ளது.தமிழகத்தில் மட்டும் ரூ 107. 34 கோடி . மதிப்புக்கு பணம், நகை, பரிசுப் பொருட்கள் பிடிபட்டுள்ளது. அடுத்த இடத்தில் ரூ.104.53 கோடியுடன் உத்தரப் பிரதேசமும், 10 3.4 கோடி ரூபாயுடன் ஆந்திரா 3-வது இடத்தையும் பிடித்துள்ளது.

நமது அண்டை மாநிலமாக கேரளா தான் இதில் ரொம்ப சுத்தம் .நயா பைசா அளவுக்குக் கூட அங்கு தேர்தல் விதிமீறல் நடக்கவில்லை என்று பட்டியலில் கூறப் பட்டுள்ளது.கேரளாவில் ஓட்டுக்கு பணம், பரிசு கொடுத்தால் சம்பந்தப்பட்ட வேட்பாளரை கேள்வி கேட்பதுடன், புறக்கணித்தும் விடுவார்கள் கேரள மக்கள் .அந்த அளவுக்கு விழிப்புணர்வு உள்ள மாநிலமாக திகழ்கிறது கேரளா .தமிழகத்திலோ அந்தக் கட்சி எவ்வளவு கொடுக்கும்.... மற்றொரு கட்சி இவ்வளவு கொடுக்கப் போகிறதாமே... நம்ம தொகுதி வேட்பாளர் இந்தியாவிலேயே பணக்காரராமே... என்று தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் எங்கு பார்த்தாலும் மக்களிடம் இதே பேச்சாக உள்ளது.

More News >>