விடுமுறையில் வீடு செல்ல விரும்பாத அபி நந்தன் - பணிபுரிந்த இடத்திலேயே ஓய்வெடுக்கிறார்

பாகிஸ்தானால் சிறைப்பிடிக்கப்பட்டு மீண்டு வந்த இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனுக்கு மருத்துவ சிகிச்சைகள் முடிந்து 4 வார விடுமுறை கொடுக்கப்பட்டது. விடுமுறையில் சொந்த வீட்டிற்கோ, வேறு எங்கு மோ செல்ல விரும்பாத அபிநந்தன் தாம் பணி புரிந்த இடத்திலேயே தங்கியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானால் சிறைப் பிடிக்கப்பட்ட அபிநந்தன் இந்தியா மற்றும் உலக நாடுகளின் அழுத்தம் காரணமாக பாகிஸ்தான் அரசால் விடுவிக்கப்பட்டார். ஆனால், இரண்டு நாட்கள் அங்கு பிணைக்கைதியாக அடைக்கப்பட்டிருந்த அபிநந்தனிடம் நடத்தப்பட்ட சித்ரவதை மற்றும் விசாரணை குறித்து விமானப் படையினர் 2 வாரகாலமாக அபிநந்தனிடம் விசாரணை நடத்தி வந்தனர்.விசாரணைக்குப் பின்னர் 4 வார விடுமுறையில் செல்ல அபிநந்தனுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால் அபிநந்தனோ விடுமுறையில் வெளியில் எங்கும் செல்லவில்லையாம். எங்கும் தலை காட்டவும் இல்லை. தனது குடும்பத்தினர் வசிக்கும் டெல்லி இல்லத்திற்கோ, பெற்றோர் வசிக்கும் சென்னைக்கோ செல்லாமல், தாம் பணி புரிந்த ஸ்ரீநகர் விமானப் படை அலுவலகத்துக்கே திரும்பி விட்டாராம். ஸ்ரீநகரிலேயே ஓய்வெடுத்து வரும் அபிநந்தன் விடுமுறை முடிந்த பின் மீண்டும் பணியில் இணைய உள்ளார்.

அபிநந்தன் பணியில் இணையும் முன் மீண்டும் அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தி, தகுதிச் சான்று வழங்கிய பின்னரே படை விமானங்களை இயக்க அனுமதிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.

More News >>