ஜெயலலிதா இருந்திருந்தால் ஓ.பி.எஸ் தன் மகனுக்கு சீட் வாங்கியிருக்க முடியுமா.. ஸ்டாலின் கேள்வி

ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் ஓ.பன்னீர்செல்வம் தனது மகனுக்கு சீட் வாக்கியிருக்க முடியுமா? என்ற கேள்வியை திமுக தலைவர் ஸ்டாலின் முன்வைத்திருக்கிறார்.

நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.தேனி நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் சரவணகுமார் ஆகியோரை ஆதரித்து பெரியகுளத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அப்போது, பேசிய  மு.க.ஸ்டாலின், ஜெயலலிதாவின் காலில் விழுந்து கடந்த தேர்தலில்  சீட்  வாங்கினார் ஓ.பி.எஸ். இப்போது, ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால்  ஓபிஎஸ் தனது மகனுக்கு சீட் வாங்கியிருக்க முடியுமா? என்ற கேள்வியை எழுப்பிய அவர், ஓபிஎஸ் மகன் என்பதைத் தவிர  ரவீந்திரநாத்துக்கு வேறு ஏதேனும் தகுதிகள் உள்ளது? என்றார். தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் திமுக வெற்றி பெரும். மேலும், திமுக-வின் விருப்பம்போல் ராகுல்காந்தி பிரதமர் ஆவது உறுதி என்று பேசினார்.

More News >>