ஐபிஎல்: கூகுள் அசிஸ்டெண்ட் உடன் உரையாடலாம்
தேர்தலை விட இன்னொரு விஷயம் இந்தியாவை பரபரப்பாக்குகிறது என்றால் அது இந்தியன் பிரீமியர் லீக் என்னும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள்தாம். வானளாவிய சிக்ஸர்களால் ரசிகர்களை பரவசப்படுத்தும் ஐபிஎல், இம்முறை மன்கட் ஆட்டமிழப்பு போன்ற காரணங்களால் இன்னும் கவனத்திற்குள்ளாகியுள்ளது.
ஐபிஎல் போட்டிகளை தொலைக்காட்சியில் பார்க்க இயலவில்லை என்ற ஆதங்கத்தோடு இருப்போருக்கு உதவி செய்யும்படியாய் கூகுள் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. கூகுள் அசிஸ்டெண்ட்டை (Google Assistant) ஸ்மார்ட்போனில் நிறுவிக் கொள்வதன் மூலம் ஐபிஎல்
போட்டி விவரங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியும்.'இன்றைக்கு என்ன போட்டி நடக்கிறது?' (What's the IPL schedule?') 'ஸ்கோர் என்ன?' (What's the score?)
'சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி வீரர்கள் பட்டியல்' (player list)- என்று நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு கூகுள் அசிஸ்டெண்ட் பதில் கூறும்.
ஐபிஎல் பற்றி அரட்டையடிப்பதற்கு நண்பர்கள் அருகில் இல்லையே என்று கவலைப்படுகிறீர்களா? 'உன் கணிப்பு என்ன?' (What are your predictions for IPL Season?) என்று குறிப்பிட்ட போட்டியை பற்றி கூகுள் அசிஸ்டெண்ட் இடம் கேட்கலாம். அது பதில் கொடுக்கும்.
ஐபிஎல் 2019 சீசன் அனுபவம், கூகுள் அசிஸ்டெண்ட் உதவியால் இனிமையானதாக அமையட்டும்!