அசிங்கத்தின் உச்சகட்டம் - 8 மாத பச்சிளம் குழந்தை பாலியல் பலாத்காரம்
புதுடெல்லியில் 8 மாத குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுடெல்லியின் மேற்கு சுபாஷ் நகரின் சகர்பூர் பஸ்தி பகுதியில் வீட்டில் சூரஜ் என்பவர் குடியிருந்துள்ளர். இந்நிலையில், அதே குடியிருப்பில் வசிக்கும் பெற்றோர்கள் தங்களது 8 குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு வெளியே சென்றுள்ளனர்.
வீட்டில் இருந்த 8 மாத குழந்தையை வெளியே கூட்டிச் செல்வதாகக் கூறிவிட்டு சூரஜ் (28) என்பவர் குழந்தையை ஒதுக்குப்புறமான இடத்துக்குக் கொண்டு சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
அதன் பின்னர், குழந்தையை வீட்டில் கொண்டு படுக்க வைத்துள்ளார். குழந்தையின் தாய், வீடு திரும்பியபோது குழந்தை ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளது. மேலும், குழந்தையின் பாலுறுப்பிலிருந்து கடுமையான ரத்தப்போக்கு இருந்துள்ளது. இதையடுத்து பெற்றோர் குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
குழந்தையை சோதனை செய்த மருத்துவமனை நிர்வாகம், குழந்தை பலாத்காரம் செய்யப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
விசாரணையில், சூரஜ் குற்றத்தை ஒப்புக்கொண்டார். சூரஜ் மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்திற்கு டெல்லி பெண்கள் ஆணைய தலைவி சுவாதி ஜெய் ஹிந்த் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். அதில், ”மோசமான சம்பவம் நடந்துள்ளது. தலைநகரத்தில் 8 மாத குழந்தை கற்பழிக்கப்பட்டு உள்ளது. மேலும், மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக்கொண்டு இருக்கிறார். ஒருவரும் இந்த அமைப்பை கேள்வி கேட்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.