இந்தியாவிலேயே `வெள்ளிக்கிழமை நாயகன் விஜய் சேதுபதி மட்டும் தான்.. ஏன் தெரியுமா

இந்தியாவிலேயே அதிக படங்களை கையில் வைத்திருக்கும் ஒரே நடிகர் விஜய்சேதுபதி தான். ஒட்டு மொத்தமாக எத்தனை படங்களை கைவசம் வைத்திருக்கிறார் தெரியுமா?

‘வெள்ளிக்கிழமை நாயகன்’ என்கிற பெயர் கோலிவுட்டில் அடிக்கடி சொல்லப்படும் ஒரு வார்த்தை. அப்படியென்றால் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் படங்களை தவறாமல் ரிலீஸ் செய்யும் நடிகர்களையே வெள்ளிக்கிழமை நாயகர்கள் என்று சொல்லுவார்கள். டஜன் கணக்கில் எப்பொழுதும் படங்களை வைத்திருப்பது, வருடத்துக்கு ஐந்து படங்களுக்கு மேல் வெளியாகும். அப்படியான தமிழ் நடிகர் என்றால், அது விஜய்சேதுபதி தான். இந்த வருடம் விஜய்சேதுபதிக்கு ரஜினியுடன் நடித்த பேட்ட வெளியானது. தொடர்ந்து நாளை மறுநாள் தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் சூப்பர் டீலக்ஸ் வெளியாகிறது.

இப்போது அருண்குமார் இயக்கத்தில் ‘சிந்துபாத்’, மணிகண்டன் இயக்கத்தில் ‘கடைசி விவசாயி’, சீனுராமசாமி இயக்கத்தில் ‘மாமனிதன்’, புதுமுக இயக்குநரின் ‘துக்ளக்’, விஜய்சந்தர் இயக்கும் பெயரிடப்படாத படங்களில் நடித்து வருகிறார் விஜய்சேதுபதி. இப்படங்கள் மட்டுமின்றி, சீனுராமசாமி இயக்கத்தில் இடம் பொருள் ஏவல் படம் தயாராகியும் இன்னும் வெளியாகவில்லை. அப்படம் எப்பொழுது வேண்டுமென்றாலும் வெளியாகலாம். தவிர, எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் ‘லாபம்’, பொன்ராம் இயக்கவிருக்கும் படம், சேரனுடன் ஒரு படம், ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கவிருக்கும் படங்களில் நடிக்கவிருக்கிறார். தெலுங்கில் சைரா நரசிம்மா ரெட்டி, மலையாளத்தில் ஒரு படம் என மொத்தமாக 18 படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இது மட்டுமின்றி, விஜய்சேதுபதி புரொடக்‌ஷனில் இரண்டு படங்களை தயாரிக்கவும் இருக்கிறார். ஆக, இந்தியாவில் அதிகப்படங்களை கைவசம் வைத்திருக்கும் நடிகர் விஜய்சேதுபதி ஒருவரே....!

 

More News >>