மில்லரின் ஆட்டம் வீண்! தோல்வியை தழுவியது பஞ்சாப் ...

பஞ்சாப் அணிக்கு எதிரானப் லீக் போட்டியில் கொல்கத்தா அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில் பஞ்சாப் - கொல்கத்தா அணிகள் பலப்பரிட்சை நடத்தின.டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த கொல்கத்தா அணி வீரர்கள் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். நிதிஷ் ரானா 34 பந்துகளில் 63 ரன்கள் எடுத்த நிலையில் வருண் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதிரடியாக விளையாடிய ரஸ்ஸல் 17 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து ஆன்ட்ரீவ் பந்தில் அவுட் ஆனார். உத்தப்பா 50 பந்துகளில் 67 ரன்களை எடுத்து கடைசி வரை அவுட் ஆகாமல் ஆடினார். ஆரம்பம் முதலே நல்ல பங்களிப்பைக் கொடுத்ததால் கொல்கத்தா அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் குவித்தது.

அடுத்து பஞ்சாப் அணி தொடக்க வீரராக களமிறங்கிய கே.எல்.ராகுல் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். கெய்ல் 13 ரஸ்ஸல் பந்தில் 20 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மாயன்ங் அகர்வால் அதிரடியாக ஆடி 34 பந்துகளில் 58 ரன்களைக் குவித்தார். சர்ஃபாஸ் கான், 13 ரன்களில் ஆட்டமிழந்தார். ஐந்தாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டேவிட் மில்லரும் மன்ந்த் சிங்கும் அதிரடியாக ஆடினர். மில்லர் 40 பந்துகளில் 59 ரன்களையும் மன்தீப் சிங்15பந்துகளில் 33 ரன்களையும் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றனர்.

இருப்பினும், பஞ்சாப் அணியில் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது. இதனால், பஞ்சாப் அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியிடம் தோல்வியடைந்தது.

More News >>