பரோட்டா கடையிலும், பியூட்டி பார்லரிலும் அராஜகம் செய்பவர்கள் திமுகவினர்- பிரேமலதாவின் ஆவேச பிரசாரம்

ஏப்ரல் 18-ந் தேதி நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்காக தமிழத்தில் அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும், திமுக தலைமையில் ஒரு கூட்டணியும் அமைத்துப் போட்டியிடுகின்றன. தலைவர்கள் அனைவரும் தமிழகம் முழுவதும் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எம்.எஸ்.எம் ஆனந்தனை ஆதரித்து, கூட்டணிக் கட்சியான தே.மு.தி.க-வின் பொருளாளர் பிரேமலதா நேற்று திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசாரத்தில் பேசிய பிரேமலதா, "எதிரணியான தி.மு.க-வினர், இந்தக் கூட்டணி அமையக் கூடாது என்பதற்காகப் பல்வேறு சூழ்ச்சிகளைச் செய்தார்கள். ஆனால், இது ஒரு வெற்றிக் கூட்டணி. அ.தி.மு.க, தே.மு.தி.க மற்றும் பா.ஜ.க-வினர் எல்லாம் பக்திமான்கள். பண்புமிக்க பணிவாளர்கள். ஆனால் எதிரணியினரோ, பரோட்டா கடைக்குப் போனாலும் சரி, பியூட்டி பார்லருக்குப் போனாலும் சரி, அடித்துக்கொண்டு அராஜகம் செய்கிறார்கள் . தி.மு.க - காங்கிரஸ் கூட்டணிக்கு இனி ஒரு ஓட்டுகூட கிடையாது என்ற நிலையை நாம் உருவாக்க வேண்டும்.பிரதமர் வேட்பாளர்கள் மோடி மற்றும் ராகுல் காந்தி என்பது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம். எங்கள் கூட்டணியில் ''திருப்பூரில் ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் நிறைவேற்றப்படும். உறுதியாக வெற்றிபெற்று நமது திருப்பூர் தொகுதியை தமிழ்நாட்டின் முதன்மைத் தொகுதியாக மாற்றியே தீருவோம் என்று நாம் அனைவரும் சூளுரை ஏற்போம். இந்தக் கூட்டணி என்றைக்கும் தொடரும் கூட்டணி'' என்றார் பிரேமலதா.

More News >>