அவ்வ்வ்.. ட்ரெய்லரே இவ்வளவு பயமா இருக்கே.... மிரள வைக்கும் காஞ்சனா 3

ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்து வரும் காஞ்சனா 3 படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

ராகவா லாரன்ஸ் எழுதி, இயக்கிய முனி, காஞ்சனா , காஞ்சனா 2 படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில நல்ல வரவேற்பு. இப்பொழுது முனி நான்காம் பாகமான, அதாவது காஞ்சனா 3 படத்தை இயக்கி, நடித்துவருகிறார் ராகவா லாரன்ஸ். இந்தப் படத்த சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துவருகிறது. இப்படம் முதலில் ஏப்ரல் 18ல் வெளியாகும் என்று சொல்லப்பட்டது. அதன்பிறகு, ஏப்ரல் 12ல் வெளியாகும் என்றார்கள். ஆனால், இந்த ரெண்டு தேதியும் இல்லாமல், இறுதியாக ஏப்ரல் 19ல் வெளியாகும் என்று உறுதிபடுத்தியுள்ளனர். தமிழக தேர்தல் நாளுக்கு மறுநாள் வெளியாவதால், எந்த களேபரமும் இல்லாமல் படத்துக்கு கூட்டம் வரும் என்பதே அவர்களின் திட்டம்.

ஒவ்வொரு சிங்கிள் டிராக்காக ரிலீஸ் பண்ணி வந்த படக்குழு, தற்பொழுது காஞ்சனா 3 படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது. ராகவா லாரன்ஸுன் சேர்ந்து வேதிகா, ஓவியா, ராய் லட்சுமி, கோவை சரளா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

ட்ரெய்லர் லின்க் : https://goo.gl/YXYskU

More News >>