அதிமுகதிமுக கூட்டணிக்கு ஓட்டு போடாதீங்க பிரசாரத்தில் டங் ஸ்லிப்பான ராமதாஸ்

பிரச்சார பொதுக்கூட்டத்தில் அதிமுக-வுக்கு வாக்களிக்க வேண்டாம் என பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் தேர்தல் தேதி நெருங்கி வருகிறது. அதனால், வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் கட்சித் தலைவர்கள் இறங்கியுள்ளனர். செட்யூல் போட்டு, பொதுக் கூட்டங்களில், திமுக, அதிமுக, பாமக தலைவர்கள் கலந்து வருகிறார்கள்.

இந்நிலையில், அதிமுக கூட்டணியில் உள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில், தொகுதி பொதுக்கூட்டம் திருவண்ணாமலையில் நடைபெற்றது. இதில், அதிமுக சட்டமன்ற வேட்பாளர் செஞ்சி சேவல் வி.ஏழுமலை என்பவரை ஆதரித்துப் பேசினார் ராமதாஸ்.

அப்போது, தொண்டர்களைப் பார்த்து, எந்த காரணத்திற்காகவும் திமுக-அதிமுக கூட்டணிக்கு வாக்கு அளிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார். திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டாம் என்று கூறுவதற்குப் பதிலாக திமுக-அதிமுக கூட்டணி என்று தவறுதலாகப் பேசினார். இதை, எதிர்பார்க்காத அதிமுக, பாமக நிர்வாகிகள் இடையில் சலசலப்பு ஏற்பட்டது. தொண்டர்கள் மத்தியிலும் இதே சலசலப்பு எழுந்தது.

More News >>