அசுரன் படம் குறித்த முக்கிய சீக்ரெட்
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் தயாராகிவரும் படம் அசுரன். இப்படம் குறித்த பல தகவல்கள் தற்பொழுது கிடைத்துள்ளது.
வடசென்னை படத்துக்குப் பிறகு, வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியில் உருவாகிவரும் படம் அசுரன். இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் தற்பொழுது நடந்துவருகிறது. படத்தில் மலையாள நடிகை மஞ்சுவாரியர், இயக்குநர் பாலாஜி சக்திவேல், நடிகர் பசுபதி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
அடுத்தடுத்து பல போஸ்டர்கள் வெளியாகியிருக்கும் நிலையில், இயக்குநர் வெற்றிமாறன் படம் குறித்த தகவலை போட்டு உடைத்துள்ளார். என்னவென்றால் , படத்தில் தனுஷூக்கு இரட்டை வேடம். ஒரு கேரக்டர் தந்தையாகவும், மகன் கேரக்டரில் மகனாகவும் நடிக்கிறார் தனுஷ். 40 வயது தாண்டிய தந்தை கேரக்டருக்கு ஜோடியாக தான் மஞ்சுவாரியர் நடிக்கிறாராம்.
சமீபத்தில் ஒரு மலையேறும் காட்சி ஒன்று படமாக்கப்பட்டதாம். மலையேற 3 மணிநேரம், இறங்க 3 மணிநேரம் நடுவில் இரண்டு மணிநேரம் மட்டுமே படப்பிடிப்பு எடுக்க வேண்டிய சூழல். அந்த காட்சிக்கு தனுஷ் எந்த சலிப்பும் காட்டாமல் நடித்து கொடுத்தாராம். ஏனெனில் மலையேறுவதிலேயே முழு எனர்ஜியும் போய்விடும். ஆனாலும் அதையெல்லாம் தாண்டி பிரமாதமாக நடித்துமுடித்திருப்பதாக தெரிவித்துள்ளார் வெற்றிமாறன்.
பூமணியின் வெக்கை நாவலை மையா வச்சு தான் படத்தை இயக்கிவருகிறார் வெற்றிமாறன். நீண்ட நாட்களுக்குப் பிறகு வெற்றிமாறன் - தனுஷ் - ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் உருவாகும் படமென்பதால் எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகியுள்ளது.