கர்நாடக அமைச்சர்கள், உறவினர்கள் வீடுகளில் வருமான வரி சோதனை - முதல்வர் குமாரசாமி தர்ணா போராட்டம்

கர்நாடக மாநில அமைச்சர்கள், அவர்களுடைய உறவினர்கள், நண்பர்கள் வீட்டில் நடந்த வருமானவரித் துறை சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநில முதல்வர் குமாரசாமி பெங்களூருவில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடகா மாநிலம் முழுவதும் உள்ள ஒப்பந்தாரர்கள் மற்றும் அரசு பொறியாளர் வீடுகள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.இதேபோல் மாண்டியா மாவட்டம், பாண்டவபுராவில் உள்ள அமைச்சர் புட்டராஜுவின் இல்லத்திலும் அதிகாலை ஐந்து மணி முதல் சோதனை நடத்தினர்.மதச்சார்பற்ற ஜனதா தள கட்சிக்கு மக்களவைத் தேர்தலுக்காக அதிகளவில் அமைச்சர் புட்டராஜு நிதி தருவதாக எழுந்த புகாரையடுத்து சோதனை நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகின.மேலும் முதல்வர் குமாரசாமியின் சகோதரரும் பொதுப்பணித் துறை அமைச்சருமான ரேவண்ணா மற்றும் அவருடைய உறவினர்கள் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது.

தேர்தல் நேரத்தில் நடத்தை விதிகளை மீறி பாஜகவுக்கு ஆதரவாக வருமான வரித்துறை செயல்படுவதாக முதல்வர் குமாரசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் பெங்களூருவில் உள்ள வருவானவரித் துறை அலுவலகம் முன்பாக முதல்வர் குமாரசாமி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இந்தப் போராட்டத்தில் கர்நாடக மாநில துணை முதல்வர் பரமேஸ்வராவும், மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

More News >>