கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் எதிரிகள்... தொண்டர்களுக்கு டிடிவி தினகரன் மெசேஜ்nbsp

தேர்தல் பரப்புரையை மேற்கொண்டுள்ள டிடிவி தினகரன் தொண்டர்களிடம் ஓர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்து இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 20 நாள்கள் மட்டுமே இருக்கும் நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ், தேமுதிக-வில் பிரேமலதா, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர், தீவிர வாக்கு சேகரிப்பில் இறங்கியுள்ளனர்.

இந்த வரிசையில், அமமுகவின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நேற்று தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். 10 நாள்கள் இடைவிடாது பிரச்சாரம் செய்யவும் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில், தேர்தல் பரப்புரையின் போது, வரவேற்பு, பொன்னாடை, பூங்கொத்து தருவது, பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என அமமுகவினருக்கு டிடிவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், பிரசாரத்தின் போது தன் பின்னால் வாகனங்களில் பின்தொடர்ந்து வந்து பொதுமக்களுக்கு இடையூறாகப் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்த வேண்டாம் என்றும் நாம் மக்களோடு நிற்கிறோம், மக்கள் அமமுகவின் பக்கம் நிற்கிறார்கள் என்பதை நிரூபிப்பதற்கான தேர்தல் இது. நம்மை எப்படியாவது வீழ்த்த வேண்டுமென எதிரிகள் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். அதனால், விழிப்புடன் செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

More News >>