ஹோட்டல்nbspசரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது உச்ச நீதிமன்றம்

ஹோட்டல் சரவணபவன் உணவக மேலாளரின் மகள் ஜீவஜோதி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலின் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

நாகப்பட்டினம், வேதாரணியத்தை சேர்ந்தவர் ஜீவஜோதி. இவர், உணவக மேலாளரின் மகளாவார். இவரின் கணவர் பிரின்ஸ் சா‌ந்தகுமா‌ர். இந்நிலையில், கடந்த 2௦௦1-ம் ஆண்டு, ஜிவஜோதியை மறுமணம் செய்ய வேண்டி, அவரின் கணவர் பிரின்ஸ் சா‌ந்தகுமா‌ரை கடத்திச் சென்றதாகவும், கொடைக்கானானில் வைத்து அவரை கொலை செய்ததாகவும் ராஜகோபால் மீது கொலை குற்றம், ஆள்கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் தொடரப்பட்டன.

கடந்து வந்த பாதை..

இந்த வழக்கை விசாரித்த சென்னை பூந்தமல்லி நீதிமன்றம், ராஜகோபாலுக்கு 10 ஆ‌ண்டு சிறை  த‌ண்டனையு‌ம், 55 ல‌ட்ச‌ம் ரூபா‌ய் அபராதமு‌ம் ‌வி‌தி‌த்தது. மேலும், கொலைக்கு உடந்தையாக இருந்த கா‌‌ர்மேக‌ம், ஹூசை‌ன், சேது, ப‌ட்டுர‌ங்க‌ம், கா‌சி ‌வி‌ஸ்வநாத‌ன், த‌மி‌ழ்செ‌ல்வ‌ன், முருகான‌ந்த‌ம் ஆ‌கியோரு‌க்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜகோபாலன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதே சமயம், அரசு தரப்பில் 10 ஆண்டு சிறை தண்டனையை ஆயுள் தண்டனையாக அதிகரிக்க  அப்பீல் செய்யப்பட்டது.

இதனையடுத்து, கீழ் நீதிமன்றம் வழங்கிய 10 ஆண்டுகள் சிறை தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி 2009-ல் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் ராஜகோபால். இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது.  ராஜகோபாலுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது உச்ச நீதிமன்றம்.

தற்போது, பிணையில் இருக்கும் ராஜகோபால் ஜூலை 7-ம் தேதிக்குள் சரணடைய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

More News >>