நள்ளிரவில் துரைமுருகன் வீட்டில் ஐடி ரெய்டு - காட்பாடியில் பரபரப்பு

காட்பாடியில், திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் ஐடி ரெய்டு நடத்த அதிகாரிகள் வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுக பொருளாளர் துரைமுருகன் முன்னாள் அமைச்சர் மட்டுமல்ல தற்போது எம்எல்ஏவும் கூட. தற்போது மக்களவை தேர்தல் வேளைகளில் பிசியாக இருக்கிறார். தனது சொந்த தொகுதியான வேலூரில் கதிர் ஆனந்தை மக்களவை தேர்தல் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். இதற்காக தொகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்தநிலையில் இன்று நள்ளிரவு காட்பாடியில் உள்ள அவரது வீட்டில் ஐடி நடத்த அதிகாரிகள் வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. துரைமுருகன் வீட்டுக்கு வந்த நான்கு பேர் தாங்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் என்றும், வீட்டில் சோதனை நடத்த வந்திருக்கிறோம் என்றும் கூறியுள்ளனர். வீட்டில் பணம் பதுக்கிவைக்கப்பட்டுள்ளதாக வந்த ரகசிய தகவலை அடுத்து மூன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதேநேரம் துரைமுருகனின் வழக்கறிஞர் கேட்டதற்கு வருமானவரித்துறை அதிகாரிகள் என்றும் தேர்தல் பார்வையாளர்கள் என்றும் முன்னுக்குபின் முரணாக பதிலளித்துள்ளனர்.

இதனால் இருதரப்புக்கும் இடையே நள்ளிரவு நேரத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த விஷயம் போலீசுக்கு தெரிய போலீசாரும் அங்கு விரைந்துள்ளனர். அதேபோல் கட்சியினரும் அதிக அளவில் துரைமுருகன் வீடு முன்பு குவிய தொடங்கியுள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் நேரத்தில் திமுகவின் முக்கிய பிரமுகர் வீட்டில் சோதனை நடத்த அதிகாரிகள் வந்துள்ளனர். ஏற்கனவே இன்று காலை கர்நாடக காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் ஐடி ரெய்டு நடந்தது குறிப்பிடத்தக்கது.

More News >>