இந்த அறிகுறிகள் தென்பட்டால்..நீங்கள் வோர்க் ஆல்கஹாலிக் ஆக மாறி விட்டீர்கள்!

போட்டிகள் நிறைந்த உலகில், நாம் யார் என்று அடையாளப் படுத்திக்கொள்ள பம்பரமாகச் சுழலும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டோம். நமக்கே தெரியாமல் ‘வோர்க் ஆல்கஹாலிக்’ ஆக  மாறி வருகிறோம். இதைப் பெரிதாகக் கண்டுகொள்வது இல்லை. இது சரியா? தவறா? என்ற விவாதம் அல்ல....

இந்த அறிகுறிகள் உங்களிடம் தென்பட்டால்...நீங்கள் வேலைக்கு அடிமை ஆகி விட்டீர்கள் என்று அர்த்தம்...

எப்போதும் முதல் ஆளாக வேலைக்குச் செல்வது. வேறு யாராலும் இந்த வேலையைச் செய்ய முடியாது என்ற எண்ணம், மேலோங்கி வேளையில் நுணுக்கமாக அனைத்தையும் செய்ய முயல்வது. வார இறுதியில் வேலைக்கு வரவேண்டும் என்று சொன்னாலும், முதல் ஆளாக வேலைக்குச் செல்வது. விடுமுறை நாட்கள் அல்லது வேலைக்கு ‘லீவ்’ எடுக்கும் சமயத்திலும் கூட 10 நிமிடங்களுக்கு ஒரு முறை இ-மெய்ல், வாட்ஸ்-அப் குரூப் மெசேஜ்-களை செக் செய்வது. பொழுது போக்குகள்...என எதுவும் இல்லாமல் இருப்பது. வேலை செய்யாத நாட்களில் மன அழுத்தமாக உணர்வது. வெக்கேஷனில் கூட உங்கள் மனம் அலுவலகம் தொடர்பான வேலைகளைச் சிந்திக்கும். உறவினர்கள், நண்பர்கள் என அனைவரையும் ஓரங்கட்டி வைப்பீர்கள். அதே சமயம் உங்களுடன் பணிபுரியும் சக-வேலையாட்கள் எப்படி நேரத்தை வீண் அடித்து, அவர்கள் விரும்பியவர்களுடன் நேரம் செலவிடுகிறார்கள் என்று யோசிப்பது. திட்டமிட்டிருந்ததை விட அதிக நேரம் செலவழித்து பணிபுரிவது. உங்கள் வேலை காரணமாகத்தான், உடல் சோர்வடைகிறது என்பதை உணர மறுப்பது.

மேலே குறிப்பிட்ட அறிகுறிகள் உள்ளதாக நீங்கள் எண்ணினால்...கவலை வேண்டாம். புரிந்து கொள்ளுங்கள் போதும்.

More News >>