மொறு மொறுப்பான நெத்திலி வறுவல் ரெசிபி

அசைவப் பிரியர்கள் விரும்பி சாப்பிடக்கூடிய, மொறு மொறுப்பான நெத்திலி மீன் வறுவல் எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்...

     

தேவையான பொருட்கள்:

நெத்திலி - அரை கிலோ

மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

சீரகம் - அரை டீஸ்பூன்

அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்

கடலை மாவு - 1 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

மல்லி தூள் - ஒன்றரை டீஸ்பூன்

எண்ணெய் - 1 கப்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் சீரகத்தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள், மிளகாய்தூள், இஞ்சி பூண்டு விழுது, அரிசி மாவு, கடலை மாவு, உப்பு, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கிளறவும்.

அத்துடன், நெத்திலி மீனு, சிறிது எலுமிச்சைப்பழசாறு சேர்த்து நன்றாக கிளறவும்.இதனை 30 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.

பிறகு, ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், மசாலாவுடன் பிரட்டி வைத்த நெத்திலியைப் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்.

அவ்ளோதாங்க... மொறு மொறுப்பான நெத்திலி வறுவல் ரெடி...!

More News >>