சனி பகவானை இப்படி வழிபட்டால் ஆபத்துதான்....உஷார்
நவகிரகங்களில் மிகவும் முக்கியமான கிரகமாக கருதப்படுபவர் சனி பகவான். நவகிரகங்களில் அசுப கிரகமாகவும் சனி இருக்கிறார். சனி பகவான் கொடுத்தாலும் சரி, கெடுத்தாலும் சரி அதை யாராலும் தடுக்க முடியாது.
ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் நாட்டம் இல்லாதவர்கள் கூட, சனி பெயர்ச்சி வந்தால் சற்றே கலங்கித்தான் போவார்கள். சனியின் பார்வை பட்டதால்தான் இலங்கை வேந்தன் இராவணன், சில காலங்களிலேயே இராமன் கையால் வீழ்த்தப்பட்டு மடிந்தார்.
சனி கிரகத்தின் பார்வை 3, 7, 10 ஆகிய இடங்களில் அசுப பலன்களைத் தரும். ஆகவே, கோயில்களில் சனிபகவான் சன்னதி மற்றும் நவகிரகங்கள் சன்னதிகளில் சனீஸ்வரனை நேருக்கு நேர் நின்றோ அல்லது அமர்ந்தோ வழிபட வேண்டாம்.
சன்னதியின் இரண்டு பக்கத்தில் ஏதேனும் ஒரு பக்கத்தில் நின்று சனி பகவானை வழிபடுங்கள். வாழ்க்கை சிறப்பாகும்.