ஜம்முன்னு சாப்பிடலாம்.. பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி

அனைவருக்கும் பிடித்த பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு - ஒரு கப்

கடலைப் பருப்பு - கால் கப்

சீரகம் - ஒன்றரை டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 3

சின்ன வெங்காயம் - 25

கொத்தமல்லி - சிறிதளவு

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

கடுகு - கால் டீஸ்பூன்

சோம்பு - அரை டீஸ்பூன்

பூண்டு - 5 பல்

மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

தனியா - 2 டீஸ்பூன்

மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்

தக்காளி - 1

புளி - 1 எலுமிச்சைப்பழ அளவு

தேங்காய் பால் - கால் கப்

கறிவேப்பிலை - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில், துவரம் பருப்பு மற்றும் கடலைப் பருப்பை இரண்டு மணி நேரம் முன்பு தண்ணீரில் ஊரவைத்தப் பிறகு, சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்து மிக்ஸி ஜாரில் அரைத்துக் கொள்ளவும்.

அத்துடன், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் 13 மற்றும் கொத்தமல்லி, உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து சிறிய உருண்டைகளாக பிடித்துக் கொள்ளவும்.

இந்த உருண்டைகளை, இட்லி தட்டில் வைத்து சுமார் 10 நிமிடங்கள் வரை வேக வைக்கவும்.

ஒரு வாணலியில், எண்ணெய்விட்டு சூடானதும், கடுகு, அரை டீஸ்பூன் சீரகம், சோம்பு, பூண்டு சேர்த்து வதக்கவும். அத்துடன், 12 நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து  வதங்கியதும், மஞ்சள் தூள், தனியாத் தூள், மிளகாய்த் தூள், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.

பிறகு, புளித் தண்ணி சேர்த்து வேகவைக்கவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

அத்துடன், தேங்காய்ப் பால் சேர்த்து, தேவைப்பட்டால் உப்பு சேர்த்து கிளறி 2 நிமிடம் வேக வைக்கவும்.

பின்னர், பருப்பு உருண்டைகளை சேர்த்து 5 நிமிடங்கள் வேகவைத்து, இறுதியாக கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.

அவ்ளோதாங்க.. சுவையான பருப்பு உருண்டை குழம்பு ரெடி..!

More News >>