12 ராசிகளுக்கான விசித்திரமான முன் ஜென்ம மரணம்!
நவீன தொழில் நுட்ப உலகில் மனிதன் கால் பதிக்காத துறையே இல்லை. இந்நிலையில் எல்லாவற்றுக்கும் மேலாக ஏதோ ஒரு சக்தி உள்ளதாக கூறப்படுகிறது. ஒருவர் பிறந்த தேதியில் குறிப்பிட்ட நேரத்தில் அவருக்கான ஜாதகம் எழுதப்படுகிறது.
இந்த ஜாதகம் எல்லாம் கட்டுக்கதை என்று கூறும் வகையில், எல்லாம் ஜாதக கணக்கில் உள்ளப்படித்தான் நடக்கும் என்பது ஒரு தரப்பினரின் கருத்து. நம்மையும் மீறிய ஏதோ ஒரு உண்மையும் சக்தியும் உள்ளது. ஜாதகம் என்பது வெறும் 12 கட்டங்கள் 9 கிரகங்களின் பெயரால் எழுதப்பட்டிருக்கும் என்பது மட்டும் கிடையாது. அதில் உள்ள அறிவியல் உண்மையை நாம் கொஞ்சம் புரிந்து கொள்ள வேண்டும். ஆம். பிரபஞ்ச இயக்கம் என்பதே கிரகங்களின் இயக்கத்துடன் சேர்ந்தது தான். ஜோதிடத்தின் மூலம் வெறுமனே எதிர்காலத்தை மட்டுமே கணிக்க முடியும் என்று கிடையாது. ஜோதிடத்தின் மூலம் கடந்த காலத்தில் குறிப்பிட்ட நபருடைய வாழ்க்கையையும் கணித்துச் சொல்ல முடியும்.
ஜோதிடக் கலையில் கை தேர்ந்த சிலரால், முன் ஜென்மத்தைக் கூட கணித்துச் சொல்லிவிட முடியும். முன் ஜென்மத்தில் எந்தெந்த ராசிக்காரர்கள் என்னென்ன மாதிரியான மரணங்களைத் தழுவியிருப்பார்கள் என்பதை இப்போது பார்க்கலாம். மேஷ ராசி காரர்கள், தங்களுடன் உடன் பழகும் நண்பர்களாலே கொலை செய்ய பட்டிருக்கலாம். ரிஷப ராசி காரர்கள், சகல வித சௌகரியங்களையும் அனுபவித்து, வயதான பின்னர் இயற்கையாக மரணம் அடைந்து இருப்பார். மிதுன ராசிக்காரர்கள், மலைகள், உயரமான கட்டிடங்கள் போன்றவற்றிலிருந்து யாரேனும் உங்களை கீழே தள்ளி விட்டிருப்பார்கள். கடக ராசிக்காரர்கள், தண்ணீர் சம்மந்தமான குளம், கிணறு, ஏரி போன்றவற்றல் மூழ்கி உங்களது உயிர் போயிருக்கும்.
சிம்ம ராசிக்காரர்கள், முன் விரோதம் காரணமாக யாரேனும் கொலை செய்துருப்பார். கன்னி ராசிக்காரர்கள், எதிர்பாராத விபத்துகளினால் மரணமடைத்திருக்கலாம். துலாம் ராசிக்காரர்கள், உடல் நலகோளறு ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம். விருச்சிக ராசிக்காரர்கள், அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் . தனுசு ராசிக்காரர்கள்,மன அழுத்தம் ,கோபம் காரணமாக தற்கொலை செய்திருக்கலாம். மகர ராசிக்காரர்கள், கொள்ளைக் கும்பலிடம் சரமாரியாக அடிபட்டு இறந்திருக்கலாம். கும்ப ராசிக்காரர்கள்,நெருப்பு சம்மந்தப்பட்ட தீ விபத்துகளில் இறந்திருக்கலாம். மீன ராசிக்காரர்கள், தீராத சலியுடன் அவஸ்திபட்டு வயதான நிலையில் இறந்திருக்கலாம்.