பிரதமர் மோடியை எதிர்த்து சுயேட்சையாக போட்டி - பாஜக அரசால் டிஸ்மிஸ் ஆன ராணுவ வீரர் அறிவிப்பு
பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் அவரை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிடப் போவதாக, முன்னாள் ராணுவ வீரர் தேஜ் பகதுார் யாதவ் என்பவர் அறிவித்துள்ளார்.
ரியானா மாநிலம் ரேவரியை சேர்ந்தவர் தேஜ் பகதுார் யாதவ். ஜம்மு-காஷ்மீரில் எல்லைப் பாதுகாப்பு படை வீரராக பணியாற்றினார். கடந்த 2017-ம் ஆண்டு பாதுகாப்புப் படை வீரர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து, சமூக வலைத்தளங்களில் இவர் பதிவிட்ட வீடியோ ஒன்று வைரலானது. இது ராணுவத் தரப்பில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனால் பகதூரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு பின்னர் எல்லை பாதுகாப்புப் படையில் இருந்து செய்யப்பட்டார். இதனால் மத்திய பாஜக அரசு மீதும், பிரதமர் மோடி மீதும் கடும் கோபத்தில் இருந்தார் தேஜ் பகதூர்.
இந்நிலையில் அவர் பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிடப் போவதாகத் அறிவித்துள்ளார். தங்கள் கட்சியில் சேரும்படி சில அரசியல் கட்சிகள் அணுகியதாகவும் ஆனால் அதில் சேரும் எண்ணமில்லை.
பிரதமர் மோடி ராணுவ வீரர்களை பயன்படுத்தி வாக்கு கேட்கிறார். ஆனால் ராணுவ வீரர்களுக்கு அவர் எதுவும் செய்வதில்லை.குறிப்பாக துணை ராணுவப்படையினருக்கு அவர் எதையும் செய்வதில்லை. இதை, நாட்டு மக்களுக்கு எடுத்துக் கூறும் வகையில், வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடப் போகிறேன். வெற்றி தோல்வி பற்றி கவலையில்லை. இந்த அரசு பாதுகாப்பு படைக்கு எதுவும் செய்யவில்லை என்பதை வெளிப்படுத்தவே தேர்தலில் நிற்கிறேன் என்றார்.