ஈஸியா செய்யலாம் சென்னா மசாலா ரெசிபி

ஹலோ ருச்சி கார்னர் வியூவர்ஸ் ... வீட்டிலேயே சென்னா மசாலா எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்...

தேவையான பொருட்கள்:

சென்னா - 200 கிராம்

வெங்காயம் - 2

தக்காளி - 2

பட்டை - 1

சீரகம் - 1 டீஸ்பூன்

ஏலக்காய் - 3

பிரிஞ்சி இல்லை - 1

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

இஞ்சி - ஒரு துண்டு

பூண்டு - 4 பல்லு

மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

சீரகத்தூள் - 1 டீஸ்பூன்

கரம் மசாலா - 1 டீஸ்பூன்

மல்லித்தூள் - 2 டீஸ்பூன்

மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்

எலுமிச்சை சாறு - தேவையான அளவு

கொத்தமல்லி - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை :

முதலில், குக்கரில் சென்னா கொஞ்சம் உப்பு தண்ணீர் சேர்த்து 2 விசில்விட்டு வேக வைக்கவும்.

வாணலியில், ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய்விட்டு காய்ந்ததும், பட்டை, ஏலக்காய், சீரகம், பிரிஞ்சி இலை சேர்த்து வதக்கியதும், வெங்காயம் சேர்க்கவும்.

வெங்காயம் நன்றாக வெந்ததும், மஞ்சள் தூள், சீரகத்தூள், கரம் மசாலா, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து 2 நிமிடங்கள் வேக வைக்கவும்.

பிறகு, வேக வாய்த்த சென்னா கடலை, எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து கிளறி வேகவைக்கவும்.

இறுதியாக, கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான சென்னா மசாலா ரெடி...!

More News >>