தபால் ஊழியர்களுக்கு புதிய சீருடை: மத்திய அமைச்சர் அறிமுகம்

புதுடெல்லி: தபால் ஊழியர்களுக்கு புதிய சீருடையை மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் மனோஜ் சின்கா நேற்று அறிமுகப்படுத்தினார்.

இதுதொடர்பாக மத்திய அரசின் தொலை தொடர்பு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் மனோஜ் சின்கா டெல்லியில் நேற்று தபால் ஊழியர்களுக்கு புதிய சீருடையை அறிமுகப்படுத்தினார். நாடு முழுவதும் உள்ள சுமார் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தபால் ஊழியர்களுக்கு புதிய சீருடையை தேசிய தொழில்நுட்ப ஆடை வடிவமைப்பு நிறுவனம் வடிவமைத்து உள்ளது.

இதில், ஆண், பெண் ஊழியர்களுக்கு பொருத்தமான, தரமான, நீடித்து உழைக்கும் சீருடைக்கான கதர் துணி விரைவில் வழங்கப்பட உள்ளது.உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் கதர் ஆடை நம் கலாசாரத்துக்கும், நம் நாட்டின் தட்பவெப்ப நிலைக்கும் ஏற்றது. இதற்கு காதி மற்றும் கிராம தொழில் வாரியம் அனுமதி வழங்கி உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

More News >>