ஏப்ரல் 1..முட்டாள்கள் தினம்...தெரிந்தும் தெரியாமலும் ஃபூல்ஸ் ஆக நாம்

இன்று ஏப்ரல் 1...எங்கு திரும்பினாலும் ‘ஏய்... ஏமாந்துட்டியா...’ஏப்ரல் ஃபூல்’ என்ற பேச்சாகத்தான் இருக்கும்.  இந்த தினத்திற்குப் பின்னால் ஒரு வரலாறும் இருக்கிறது. அதே நேரம் இன்று ஒரு நாள் மட்டும்தான் நாம் முட்டாளாக்கப் படுகிறோமா?

சோஷியல் மீடியா ஒன்றே போதும். இன்றைய தினம் (ஏப்ரல் 1) நாம பண்ற அலப்பறையைவிட, வாட்ஸ்  அப், ஃபேஸ் புக், ட்விட்டர், இன்ஸ்டாவில் உலா வரும்  ஃபார்வேர்ட்  மெசேஜ்  அலப்பறைகள்  இருக்கே...365 நாளும் ஏப்ரல் 1 தான் போங்க.

இந்த மெசேஜை ஃபார்வேர்ட் பண்ணா நீங்கள் நினைத்தது நடக்கும். 10 பேருக்கு இந்த புகைப்படத்தை ஷேர் பண்ணீங்கனா 10 நாள நல்ல செய்தி வரும். இப்படி பலநூறு மெசேஜ்களை நாம் ஃபார்வேர்ட் செய்திருப்போம். எதுக்கு வம்புனு, யோசிக்காம ஃபார்வேர்ட் பண்ணீட்டு அமைதியா ‘வெயிட்’ பண்ணுவோம்.

இது மட்டுமா? இன்னும் எவளோ இருக்கு...சினிமா, அரசியல், ஷேர் மார்கெட், இந்தியா-பாகிஸ்தான், வரலாறுங்கிற பேருல வரும் பாருங்க ஒரு ‘மெசேஜ்’...அட போங்க பாஸ், பட்டியல் நீண்டுகொண்டே போகும்...

சரி ஏப்ரல் 1 வரலாறு தெரியுமா...

                      

16-ம் நூற்றாண்டு வரையில் ஐரோப்பிய நாடுகளில் ஏப்ரல்- 1ம் தேதிதான் புத்தாண்டாக  கொண்டாடப்பட்டு வந்ததாம். அதன் பிறகு, கிரிகேரியன்  காலண்டர்  அடிப்படையில்,  ஜனவரி 1 புத்தாண்டாகக் கொண்டாடப்படும் என போப் ஆண்டவர் ஆணை பிறப்பித்தார். இந்த உடனடி மாற்றத்தைப் பல ஐரோப்பிய நாட்டவர்கள் ஏற்றுக்கொள்ள வில்லை.

ஏப்ரல்- 1ம் தேதியை புத்தாண்டாகக் கொண்டாடி வந்தார்கள். ஜனவரி 1ம் தேதியில் புத்தாண்டைக்  கொண்டாடி வந்தவர்கள், ஏப்ரல் 1ம்  தேதியைப் புத்தாண்டாகக் கொண்டாடியவர்களைப் பார்த்து ‘அடே ஃபூல்ஸ்’ மூன்று மாதத்துக்கு முன்பே புத்தாண்டு பிறந்துவிட்டது என்று  கிண்டலடித்தார்களாம்.  அதில் இருந்துதான் ஏப்ரல் 1 முட்டாளர்கள் தினமாக அனுசரிக்கப்பட்டதாம். 

ஹேப்பி ‘ஃபூல்ஸ் டே’ மக்களே...

More News >>