வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-45 குவியும் பாராட்டுக்கள்

இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி-45 ரக ராக்கெட் இன்று காலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இதில், எமிசாட் என்ற நவீன செயற்கைக்கோள் அனுப்பிவைக்கப்பட்டது.

ஆந்திரா மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி நிலையத்தில் இருந்து, பிஎஸ்எல்வி-‌சி45 ரக ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இதற்கான, 27 மணி நேரக் கவுண்டவுன் நேற்று காலை 6:47 மணியளவில் தொடங்கியது. இந்த ஆண்டில் இஸ்ரோ சார்பில் விண்ணில் செலுத்தப்பட்ட இரண்டாவது ராக்கெட் இதுவாகும்.

பிஎஸ்எல்வி-சி45, ராக்கெட்டில் இந்தியாவின் நவீன செயற்கைக்கோள் எமிசாட் என்ற மின்னணு செயற்கைக்கோள் அனுப்பப்பட்டது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பயன்பாட்டுக்காகச் செலுத்தப்பட்ட எமிசாட் செயற்கைக்கோளின் மொத்த எடை 436 ஆகும். டி.ஆர்.டி.ஓ-வின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் எமிசாட் இந்திய இராணுவத்தின் உளவு பயன்பாட்டிற்காகவும் விண்ணில் செலுத்தப்பட்டது.

ஐஐஎஸ்டி தயாரித்த சிறிய ஆய்வு சாதனங்களுடன், அமெரிக்கா, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, லித்துனியா போன்ற வெளிநாடுகளின் 29 செயற்கைக் கோள்களும் அனுப்பப்பட்டன. இந்தாண்டில் இஸ்ரோ அனுப்பும் இரண்டாவது ராகெட் என்பது குறிப்பிடத்தக்கது.

குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்குப் பாராட்டை தெரிவித்தனர். இணையதள வாசிகளும் வெகுவாக தங்களின் பாராட்டுக்களைப் பகிர்ந்து வருகிறார்கள்.

More News >>