பெரும் வன்முறை, துப்பாக்கிச் சூடு - இறந்ததாக கூறப்பட்டவர் உயிருடன் வந்தார்

உத்தரப் பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் பகுதியில் நடைபெற்ற பெரும் கலவரத்திற்கு காரணமான, இறந்ததாக கூறப்பட்ட ராகுல் உபாத்யாய் உயிருடன் திரும்பி வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உத்தரப் பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் பகுதியில் குடியரசு தினத்தை முன்னிட்டு இந்துத்துவா அமைப்புகள் சார்பில் ஊர்வலம் நடத்தப்பட்டது. 100க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனங்களில் தேசியக்கொடியுடன் அணி வகுத்துச் சென்றனர்.

அப்போது இஸ்லாமியர்கள் மற்றும், பாகிஸ்தானிற்கு எதிராக அவர்கள் முழக்கங்களையும் எழுப்பினர். பின்னர் அவர்களாகவே, இஸ்லாமியர்கள் தங்கள் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

இதில் ராகுல் உபாத்யாய் என்ற ஹிந்து இளைஞர் ஒருவர் இறந்து விட்டதாகவும் செய்தி பரவியது. இதையடுத்து இரு தரப்பினரும் மோதலில் ஈடுபட்டனர். வாகனங்கள், கடைகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. கலவரத்தை அடக்க துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

இந்நிலையில் திடீர் திருப்பமாக, கலவரத்தில் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட ராகுல் உபாத்யாய் உயிருடன் இருப்பது தெரிய வந்தது. போலீசாரும் இதனைத் தற்போது உறுதி செய்துள்ளனர்.

தான் கொல்லப்பட்டதாக வெளியான செய்தி பற்றி ராகுல் உபாத்யாய் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், “ஊர்வலம் நடந்த பகுதிக்கே தான் செல்லவில்லை. எனது நண்பர் ஒருவர் என்னை தொலைபேசியில் அழைத்து, காஸ்கஞ்ச் நான் இறந்தவிட்டதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவுவதாக கூறினார். அதை எனக்கு அனுப்புமாறு கூறினார். அதன் பிறகுதான் உண்மையை அறிந்தேன்” என்று கூறியுள்ளார்.

More News >>