பேபிnbspஷாம்புவில் தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருள்கள் தர ஆய்வில்nbspஜான்சன்nbspnbspஜான்சன்ஸ் தோல்வி

ஜான்சன் அன்ட் ஜான்சன்’ஸ் பேபி ஷாம்புவில் உடலுக்குத் தீங்கு விளைவிக்க கூடிய  வேதிபோருள்கள்  இருப்பதாக தர ஆய்வு சோதனையில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் முன்னணி பன்னாட்டு நிறுவனமான ஜான்சன் அன்ட் ஜான்சன், குழந்தைகளுக்குப் பயன்படும்  பேபி சோப், பேபி ஷாம்பு, பேபி ஆயில் உள்ளிட்ட பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் புற்றுநோய் கிருமிகளை உருவாக்கும் வேதிப்பொருள்கள் உள்ளதாக சமீபத்தில் புகார் எழுந்தது.

இதனையடுத்து, ராஜஸ்தானின் உள்ள ஜான்சன் அன்ட் ஜான்சன்’ஸ் குடோன்களில் அம்மாநில மருந்து கட்டுப்பாடு அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஆய்வுக்காக சில பேபி ஷாம்புகளை அதிகாரிகள் எடுத்துச் சென்ற, தர ஆய்வு சோதனைக்கு அனுப்பி வைத்தனர். சோதனை முடிவில், உடலுக்குத் தீங்கு விளைவிக்கும்  வேதிபோருள்கள்  இருப்பதாகக் கண்டறியப்பட்டது. இது தொடர்பாக, ராஜஸ்தான் தர கட்டுப்பாடு ஆணையம் அறிக்கையையும் வெளியிட்டுள்ளது. அதில்,  ஜான்சன் அன்ட் ஜான்சன்’ஸ் ஷாம்பு இடம்பெற்றுள்ளது.

முன்னதாக, ஜான்சன் அன்ட் ஜான்சன்’ஸ் பவுடர் மீதும் இதே புகார்கள் எழுந்தன. அந்த சர்ச்சை அடங்குதற்குள், மீண்டும் புகார் எழுந்துள்ளது.

 

More News >>