வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்க்கப் போகும் பாஜக கூட்டாளி கட்சித் தலைவர் - அமித் ஷா அறிவிப்பு

கேரளாவின் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்டால் பாஜகவின் கூட்டாளியான பாரத் தர்ம ஜன சேனாவின் இளம் தலைவரான தூஷார் வெல்லபள்ளியை நிறுத்தப் போவதாக அமித் ஷா அறிவித்துள்ளார்.

உ.பி.யின் அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியிலும் ராகுல் போட்டியிடப் போவதாக நேற்று அறிவிப்பு வெளியானது. காங்கிரஸ் கட்சியின் இந்த அறிவிப்புக்கு, கேரளாவில் ஆளும் இடதுசாரி முன்னணி தரப்பில் கடும் விமர்சனம் எழுந்தது. பாஜகவை எதிர்க்கும் ராகுல்காந்தி, அக்கட்சியை வீழ்த்த பாஜக ஆளும் மாநிலங்களில் நின்று வெற்றி பெறுவதை விட்டு விட்டு எங்களை எதிர்க்க வருவதேன்? என்று விமர்சித்ததுடன், ராகுலுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தி தோற்கடிப்போம் என்றும் மார்க்சிஸ்ட் கட்சி அறிவித்திருந்தது.

இந்நிலையில் பாஜகவும் வலுவான வேட்பாளரை நிறுத்துவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இம்முறை கேரளாவில் பாரத் ஜனதர்ம சேனா என்ற அமைப்புடன் கூட்டணி சேர்ந்து பாஜக தேர்தலை சந்திக்கிறது. இந்த அமைப்பின் தலைவரான தூஷால் வெல்ல பள்ளி என்பவர் வளர்ந்துவரும் இளம் தலைவராவார். இவர் திருச்சூர் தொகுதியில் போட்டியிடுவார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட்டால் அவரை எதிர்த்து பாஜக கூட்டணியில் தூஷால் நிறுத்தப்படுவார் என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா அறிவித்துள்ளார்.

More News >>