பாசிப் பருப்பு ஹல்வா ரெசிபி
ஹலோ ருச்சி கார்னர் வியூவர்ஸ்.. இன்னைக்கு நாம் புதுவித ஹல்வா எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கப் போறோம்.
தேவையான பொருட்கள்:
பாசிப் பருப்பு - அரை கப்
நெய் - அரை கப்
சர்க்கரை - 200 கிராம்
கோதுமை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
முந்திரி பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய்த் தூள் - கால் டீஸ்பூன்
செய்முறை:
முதலில், பாசிப் பருப்பை நன்றாக கழுவி குக்கரில் போட்டு அத்துடன் தண்ணீர் சேர்த்து 4 விசில் வரும் வரை வேகவிடவும்.
பருப்பு நன்றாக ஆறியதும், மிக்ஸி ஜாரில் போட்டு மையாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில், கால் கப் நெய் போட்டு உருகியதும், முந்திரிப் பருப்பு சேர்த்து வறுத்து தனியாக எடுக்கவும்.
அதே நெய்யில், கோதுமை மாவு சேர்த்து நன்றாக வறுக்கவும்.
அத்துடன், அரைத்து வைத்த விழுதை சேர்த்து நன்றாக கிளறி 2 நிமிடங்கள் வேக வைக்கவும். பிறகு, சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறிக் கொண்டே இருக்கவும்.
பின்னர், மீதமுள்ள நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்றாக கெட்டியாகும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும்.
இறுதியாக, வறுத்த முந்திரிப் பருப்பு, ஏலக்காய்த் தூள் சேர்த்து கிளறினால் சுவையான பாசிப்பருப்பு ஹல்வா ரெடி..!