டெல்லியிலிருந்து அமெரிக்காவுக்கு 40 நிமிடத்தில் செல்லலாம்- வருது பயணிகள் ராக்கெட்hellip.

உலகின் ஒரு இடத்திலிருந்து அதிகபட்ச தூரம் உள்ள எந்த மூலைக்கும் ஒரு மணிநேரத்துக்குள் செல்லும் வகையில் நவீன பயணிகள் ராக்கெட் தயாராகி வருகிறது.

புராண படங்களில் கடவுள்கள் விண்ணில் பறக்கும் ரதங்களில் செல்வதை நாம் பார்த்து கண்டு களித்து இருப்போம். நாமும் அதைபோல் பறக்க முடியாதா என்ற சமானிய மனிதர்களின் ஏக்கத்தை நிறைவு செய்தது விமான போக்குவரத்து. தற்போது அதிலும் ஒரு படி மேலே போய் உலகின் எந்தவொரு மூலைக்கும் ஒரு மணி நேரத்துக்குள் வேகமாக செல்லும் வகையில் நவீன பயணிகள் ராக்கெட் தயாரிக்கப்பட்டு வருகிறது.அமெரிக்காவை சேர்ந்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலக் மாஸ்க், கடந்த 2017ல் சர்வதேச போக்குவரத்தின் மைல் கல்லாக புதிய திட்டத்தை தன் நிறுவனம் செயல்படுத்தி வருவதாக கூறினார். பூமியின் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு ஒரு மணி நேரத்துக்குள் செல்லும் வகையில் பயணிகள் ராக்கெட் விமானம் தயாரிக்க இருப்பதாக எலன் மாஸ்க் கூறியிருந்தார்.

தற்போது அந்த திட்டம் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாக முதலீட்டு வங்கியான யுபிஎஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: எலன் மாஸ்க்கின் நிறுவனம், மணிக்கு 27 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் அல்ட்ரா பாஸ்ட் ஸ்பேஸ் கிராப்ட் எனப்படும் அதிவேக பயணிகள் ராக்கெட் விமானத்தை தயாரித்து வருகிறது. இந்த பயணிக்ள ராக்கெட் விமானம் பயன்பாட்டுக்கு விரைவில் பயன்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளது.

இந்த பயணிகள் ராக்கெட் விமானம் போக்குவரத்து சேவையில் களம் இறங்கினால் உலகின் எந்தவொரு பகுதியில் இருந்தும் மற்றொரு பகுதிக்கு அதிகபட்சம் ஒரு மணி நேரத்துக்குள் சென்று விடலாம். உதாரணமாக டெல்லியிலிருந்து அமெரிக்காவின் சான்பிரான்ஸ்சிகோ 40 நிமிடத்துக்குள் சென்று விடலாம். இந்த ராக்கெட் விமானத்தில் ஒரு முறை பயணம் செய்ய பயணிகள் இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.1.77 லட்சம் கட்டணமாக செலுத்த வேண்டியது இருக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More News >>