வடமாநிலங்களில் 6.2 ரிக்டர் அளவில் திடீர் நிலநடுக்கம்
புதுடெல்லி: கஜகஸ்தான் எல்லையில் ஏற்பட்ட திடீர் நிலநடுகத்தின் தாக்கம் பாகிஸ்தான், காஷ்மீர், டெல்லி ஆகிய இடங்களில் எதிரொலித்தது.
ஆப்கானிஸ்தான் நாட்டின் கஜகஸ்தான்&இந்துகுஷ் மலைப்பகுதியில் இன்று திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் வடமாநிலங்களில் தாக்கம் ஏற்பட்டது. மேலும், பாகிஸ்தானின் லாகூர், இஸ்லாமாபாத் மற்றம் பெஷாவர் உள்ளிட்ட நகரங்களில் நில அதிர்வு உணரப்பட்டது.இதேபோல், நாட்டின் வட மாநிலங்களான டெல்லி, ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் நில அதிர்வு ஏற்பட்டது.
நில அதிர்வை உணர்ந்த பொது மக்கள் அச்சத்தில் தங்களது வீட்டை விட்டு வெளியே ஓடிவந்து தஞ்சம் அடைந்தனர். இதன் பின்னர், பொது மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர்.