சூப்பர் பிரேக் ஃபாஸ்ட் நாண் ரெசிபி

ஹலோ ருச்சி கார்னர் வியூவர்ஸ்.. சூப்பரான காலை நேர உணவு நாண் எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்...

தேவையான பொருட்கள்:

பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்

பேக்கிங் சோடா - கால் டீஸ்பூன்

தயிர் - கால் டீஸ்பூன்

மைதா - 2 கப்

எண்ணெய் - 1 டீஸ்பூன்

வெண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பாத்திரத்தில், மைதா மாவு, பேக்கிங் சோடா, தயிர், பேக்கிங் பவுடர், உப்பு, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.

இந்த மாவை சுமார் 5 - 7 நிமிடங்கள் வரை பிசைந்து, அதன் மீது கொஞ்சம் எண்ணெய்விட்டு சுமார் 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

அதன் பிறகு, மாவில் இருந்து கொஞ்சம் எடுத்து சப்பாத்திப் போன்று உருட்டி, தவா அல்லது ஓவனில் சுட்டெடுக்கவும்.

நாண் தயார் ஆனதும் அதன்மீது, வெண்ணெய் தடவி எடுத்தால், சுவையான நாண் ரெடி..!

More News >>