கோபம் இருக்கிற இடத்தில்தான் குணம் இருக்கும்: எச்.ராஜாவை புகழ்ந்து தள்ளிய முதல்வர்hellip
கோபம் இருக்கிற இடத்தில் தான் குணம் இருக்கும் என்று பா.ஜ.க வேட்பாளர் எச்.ராஜாவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி புகழ்ந்து பேசினார்.
17வது மக்களவை தேர்தல் நாடு முழவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழகத்தில் இம்மாதம் 18ம் தேதி மக்களவை தேர்தலும், இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. இந்த தேர்தல்களை அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து களம் காணுகின்றன. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க, பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகள் உள்ளன.
சிவகங்கையில் பா.ஜ.க வேட்பாளராக அந்த கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், எச். ராஜா கொஞ்சம் கோபக்காரர்தான். கோபம் உள்ள இடத்தில்தான் குணம் இருக்கும் என்று புகழ்ந்து பேசினார்.
மேலும், தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு தேர்தல் காய்ச்சல் வந்து விட்டது.
அதனால்தான் என்ன பேசுவது என்று தெரியாமல் பேசி கொண்டிருக்கிறார். தூங்கி கொண்டிருக்கும் போது அவரை எழுப்பினால் என்னை திட்டிக்கொண்டேதான் எழுந்திருப்பார். முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இந்த தொகுதிக்கு ஒன்றும் செய்யவில்லை. தந்தையே ஒன்றும் செய்யாத போது தற்போது இந்த தொகுதியில் போட்டியிடும் அவர் மகன் கார்த்தி சிதம்பரம் என்ன போகிறார் என கிண்டல் செய்தார்.